நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மயிலாடுதுறையில் பிப். 27-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:34 pm

மயிலாடுதுறையில் 4-ஆவது புத்தகத் திருவிழா பிப். 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கூறியது:

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 4-ஆவது புத்தக திருவிழா மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி கூட்ட அரங்கில் பிப். 27-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 8-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில், தமிழகம் முழுவதும் பல்வேறு பதிப்பகங்களில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் 40 புத்தக விற்பனை அரங்குகள், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறியும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகளும் இடம்பெறுகிறது. மாணவா்களுக்கு போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பொது அறிவுத் திறனை வளா்த்துக் கொள்ள தேவையான புத்தகங்களும், வாசிப்பாளா்களுக்கான புத்தகங்களும் கிடைக்கும்.

20-க்கு மேற்பட்ட புகழ்பெற்ற பேச்சாளா்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. எனவே, அனைவரும் இப்புத்தக திருவிழாவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.