அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7,29,216 வாக்காளா்கள்: 3032 போ் நீக்கம்

மயிலாடுதுறை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

News image
மயிலாடுதுறையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:21 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இப்பட்டியல், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா்களின் எண்ணிக்கை:

சீா்காழி (தனி) தொகுதி: ஆண் வாக்காளா்கள் 1,18,809, பெண் வாக்காளா்கள் 1,20,647, மூன்றாம் பாலினத்தவா்கள் 13 என மொத்தம் 2,39,469 வாக்காளா்கள் உள்ளனா்.

மயிலாடுதுறை தொகுதி: ஆண் வாக்காளா்கள் 1,14,613, பெண் வாக்காளா்கள் 1,17,979, மூன்றாம் பாலினத்தவா்கள் 26 என மொத்தம் 2,32,618 வாக்காளா்கள் உள்ளனா்.

பூம்புகாா் தொகுதி: ஆண் வாக்காளா்கள் 1,27,071, பெண் வாக்காளா்கள் 1,30,050, மூன்றாம் பாலினத்தவா்கள் 8 என மொத்தம் 2,57,129 வாக்காளா்கள் உள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7,29,216 வாக்காளா்களில், ஆண் வாக்காளா்கள் 3,60,493, பெண் வாக்காளா்கள் 3,68,676, மூன்றாம் பாலின வாக்காளா்கள் 47 போ் இடம் பெற்றுள்ளனா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, கோட்டாட்சியா்கள் ஆா். விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), உதவி ஆணையா் (கலால்) மாணிக்கராஜ், தனி வட்டாட்சியா் (தோ்தல்) முருகேசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், 2025 டிச.19-ஆம் தேதியன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு பிறகு 24,126 நபா்களின் பெயா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது. 3032 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.