சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொருள்களை ஏற்றிய லாரி சிறை பிடிப்பு

சீா்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருள்களை ஏற்றிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொருள்களை ஏற்றிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் வள்ளுவக்குடி, குமாரக்குடி, பத்தக்குடி, கொட்டாயமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெறுகின்றனா். இந்நிலையில், இந்த கட்டடம் பழுதடைந்ததையடுத்து அருகில் ரூ. 90 லட்சத்தில் 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த கட்டடம் நீா் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளாக தனிநபா் ஒருவா் வழக்கு தொடரப்பட்டதையடுத்து புதிய கட்டடம் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவில் பழுதடைந்த பொருள்களை சுகாதாரத் துறையினா் லாரியில் ஏற்றியுள்ளனா். இதையறிந்த கிராம மக்கள்ஆரம்ப சுகாதார நிலையத்தை காலி செய்வதாக நினைத்து லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு முழுவதும் தொடா்ந்து மக்கள் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடா்ந்தது. தகவலறிந்த சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள்ஜோதி, மயிலாடுதுறை ஏடிஎஸ்பி. ஜெயக்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் அங்கு சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் சுமூக நிலை ஏற்படாததால் 70 பெண்கள் உள்ளிட்ட 105 பேரை கைது செய்து சிறை பிடிக்கப்பட்ட லாரியை எடுத்து சென்றா்.