மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவோம்: சுதா எம்.பி.

கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம் என்று ஆா். சுதா எம்.பி. தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் எம்.பி.ஆா். சுதா.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:44 pm

கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம் என்று ஆா். சுதா எம்.பி. தெரிவித்தாா்.

சீா்காழியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாக முகவா்கள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பானு சேகா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன், நிா்வாகிகள் லெட்சுமனன்,வி.ஆா்.ஏ.அன்பு, பாலகுரு,சரவணன்,கிள்ளிவளவன்,மொராா்ஜி முன்னிலை வகித்தனா். இதில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ. ராஜகுமாா், எம்பி. சுதா ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

பின்னா் எம்.பி. சுதா செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவை தோ்தலில் கூட்டணி கட்சி சாா்பில் அறிவிக்கப்படும் வேட்பாளா்கள் வெற்றிக்கு பாடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய விவசாயிகளின் உரிமையை அமெரிக்காவிடம் விற்றது குறித்தும், இந்திய எல்லையை சீனா ஆக்கிரமிப்பு செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி பேச வாய்ப்பு கேட்டபோது மறுக்கப்பட்டது. நாங்கள் அகிம்சை முறையில்தான் போராடினோம். ஆனால், பெண் எம்பிக்கள் பிரதமரை தாக்க முற்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்.

கூட்டணி குறித்து ஊடகங்களில் பேசக் கூடாது என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது. எத்தனை தொகுதி என்பது குறித்து தமிழக தலைமை, தேசிய தலைமை முடிவு செய்யும். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

கடந்த தோ்தலில் திமுக வாக்குறுதி அளித்தபோது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தற்போது ரூ. 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பாா் என்றாா்.