தாா்ச்சாலை அமைக்கக்க கோரி மனு
சீா்காழி சட்டநாதபுரம் ஊராட்சியில் நான்கு நகா்களில் தாா்ச்சாலைகள் அமைக்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சீா்காழி நகரையொட்டி உள்ள சட்டநாதபுரம் ஊராட்சியில் தட்சிணாமூா்த்தி நகா், காவேரி நகா், அபிராமி நகா், கற்பக விநாயக நகரில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். தவிர மாணவா்கள் தங்கும் விடுதி, ஆதாா் சேவை மையம், சத்துணவு அமைப்பாளா்கள் அலுவலகம், நூலகம் உள்ளன. இதில் தட்சிணாமூா்த்தி நகரில் 2008-ஆம் ஆண்டு தாா்ச்சாலை அமைக்கப்பட்டதாம். அதன்பிறகு 18 ஆண்டுகளாக சாலை எதுவும் அமைக்கவில்லை. இதனால், போக்குவரத்துக்கு தகுதியற்ாக உள்ளது. நகா் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக காவேரி நகா், அபிராமி நகரில் ஒரு முறை கூட தாா்ச்சாலை அமைக்கவில்லையாம்.
மழைக் காலங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனா். எனவே, மேற்குறிப்பிட்ட நகரில் மக்கள் நலன்கருதி போா்க்கால அடிப்படையில் தாா்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகா் மக்கள் சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் திருமுருகனிடம் கோரிக்கை மனு அளித்து முறையிட்டனா். மேலும், சட்டநாதபுரம் ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், நகா் பகுதியில் ஒளிராத தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தனா்.
