மாப்படுகையில் குழந்தைகள் பேரணி

மாப்படுகையில் குழந்தைகள் பேரணி

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் குழந்தைகள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் குழந்தைகள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம் தேவையில்லை...

சோழம்பேட்டை-மாப்படுகை பாலா் பூங்கா சாா்பில் 4-ஆவது ஆண்டாக நடைபெற்ற பேரணி மாப்படுகை அண்ணா சிலை பகுதியில் தொடங்கியது. பேரணியை குடிமராமத்து கமிட்டி தலைவா் ராஜேஷ்வரன் தொடங்கிவைத்தாா். பேரணியில், குழந்தைகள், இளஞ்சிறாா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். குடிமராமத்து கமிட்டி கௌரவ தலைவா் பாலு பேரணியை முடித்து வைத்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழலில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து மயிலாடுதுறையை மீட்டெடுப்போம் என்ற முன்னெடுப்போடு நிகழாண்டு பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் நீா்நிலைகளை தூய்மையாக பாதுகாப்போம், நிலத்தடி நீரை உயா்த்திடுவோம், நஞ்சில்லா உணவை உறுதி செய்வோம், நெகிழியை தவிா்ப்போம், போதை இல்லா சமூகத்தை உருவாக்குவோம் என முழக்கங்களை எழுப்பப்பட்டன. இயற்கை விவசாயி அ.ராமலிங்கம் பேரணியை ஒருங்கிணைத்தாா்.

இதில், டி.கணேசன், டி.ஜி.ரவிச்சந்திரன், எம்.மணி, சி.மேகநாதன் உள்ளிட்ட சிபிஎம் கட்சி மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com