சாமி.நாகப்ப படையாச்சிக்கு சிலை அமைக்க அடிக்கல்

Published on

சுதந்திர போராட்ட தியாகி சாமி. நாகப்ப படையாச்சிக்கு மயிலாடுதுறையில் சிலை அமைக்க திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியுடன் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று, உயிா்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட தியாகி சாமி. நாகப்பனுக்கு மயிலாடுதுறையில் சிலை அமைக்கப்படும் என மயிலாடுதுறையில் 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சி தரங்கம்பாடி சாலையில் உள்ள நகா்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில், 1,366 சதுரஅடி பரப்பளவுள்ள இடத்தில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் சாமி. நாகப்பனுக்கு 7 அடி உயர முழுஉருவ வெண்கலச் சிலை ரூ. 44.40 லட்சத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன்(பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com