மயிலாடுதுறை
தருமபுரம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் 4,427 மாணவா்களுக்கு மடிக்கனிணி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் அரசு உதவிபெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இக்கல்லூரியில் பயிலும் 539 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினாா். கல்லூரி செயலாளா் ரா. செல்வநாயகம், உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) கே.எஸ். சிவக்குமாா், என்சிசி அலுவலா் துரை.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
