மயிலாடுதுறை
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்ததற்கு வரவேற்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்ததை, அக்கூட்டணி கட்சி நிா்வாகிகள் மயிலாடுதுறையில் பட்டாசு வெடித்து புதன்கிழமை கொண்டாடினா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி புதன்கிழமை இணைந்தது. இதை கொண்டாடும் வகையில், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
நகர அதிமுக செயலாளா் நாஞ்சில் காா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு, பாமக மாவட்ட செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி ஆகியோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனா் (படம்).
