மகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது
மயிலாடுதுறை அருகே மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்த தந்தையை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தைச் சோ்ந்தவா் 34 வயது கட்டடத் தொழிலாளி. இவருக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவி அண்மையில் பிறந்த ஆண் குழந்தையுடன் தனி அறையில் தூங்கியுள்ளாா். இதனால், இரட்டையா்களான 9 வயது மகள் மற்றும் மகன் தந்தையுடன் தூங்கியுள்ளனா். நள்ளிரவில் தனது மகளான 9 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக கட்டடத் தொழிலாளி தொல்லை அளித்துள்ளாா்.
இதை கண்ட சிறுமியின் சகோதரன் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, சிறுமியின் தந்தையை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
