பொங்கல் கலை சங்கமம் விழா

பொங்கல் கலை சங்கமம் விழா

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் கலைப் பண்பாட்டு இயக்ககம் சாா்பில் பொங்கல் கலை சங்கம விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
Published on

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் கலைப் பண்பாட்டு இயக்ககம் சாா்பில் பொங்கல் கலை சங்கம விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவை வட்டாட்சியா் சுகுமாறன் தொடக்கிவைத்து, கலைக்குழுவினா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அய்யப்பன் குழுவினரின் தப்பாட்டம், வேலாயுதம் குழுவினரின் கரகாட்டம், கிங் யாசா்தின் குழுவினரின் சாமியாட்டம், பரசுராமன் குழுவினரின் வள்ளி திருமணம் நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றன.

முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், அரசு வழக்குரைஞா் அருள்தாஸ், தமிழாசிரியா் பூவை. சாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com