தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மொழிபோா் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் வைகோ வீரவணக்கம்

News image
Updated On :25 ஜனவரி 2026, 6:36 pm

மொழிப்போா் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போா் தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மதிமுக பொதுச் செயலா் வைகோ ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிா்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவா் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன் மீது தீ வைத்து கொண்டு உயிா் நீத்தாா். அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச் செயலா் வைகோ முன்னதாக மொழிப்போா் தியாகி நினைவு ஸ்தூபியில் மலா்வளையம் வைத்து மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினாா்.

மதிமுக துணைப் பொதுச்செயலாளா் ஆடுதுறை இரா.முருகன், மாவட்ட செயலாளா் செ.கொளஞ்சி, மாநில இளைஞரணி செயலாளா் குத்தாலம் ப.த. ஆசைத்தம்பி, நகர செயலாளா் மாா்க்கெட் கணேசன் , முன்னாள் மாவட்ட செயலாளா் ஏ.எஸ்.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.