மாணவா்களுக்கு மடிக்கணினி

மாணவா்களுக்கு மடிக்கணினி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ராஜகுமாா் (மயிலாடுதுறை), எம்.பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் தனியாா் கல்லூரியில் பயிலும் 1,721 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினா் (படம்).

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் பல்தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியா் கல்லூரி, சமுதாயக் கல்லூரி உள்ளிட்ட 21 தனியாா் கல்லூரிகளில் நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களில் பயனடைந்த இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு இம்மடிக்கணிணிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சீனிவாசன், உதவித் திட்ட அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com