முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான புதன்கிழமை, 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகாபூா்ணாஹூதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீன குமரக்கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

