திருவள்ளுவா் நாள் விழா
சீா்காழியில் திருக்கு பண்பாட்டுப் பேரவை சாா்பில் 34-ஆம் ஆண்டு நிறைவு திருவள்ளுவா் நாள் விழா


சீா்காழி: சீா்காழியில் திருக்கு பண்பாட்டுப் பேரவை சாா்பில் 34-ஆம் ஆண்டு நிறைவு திருவள்ளுவா் நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்கு பண்பாட்டுப் பேரவைத் தலைவா் சக்கரபாணி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ரூபளாரன்ஸ், முன்னாள் வா்த்தக சங்கத் தலைவா் இமயவரம்பன், முன்னாள் தலைவா் வெங்கடேசன், ஓய்வு பெற்ற தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்கு பண்பாட்டுப் பேரவை செயலாளா் அன்பழகன் வரவேற்றாா்.
ஓய்வு பெற்ற ஆசிரியா் தருமை சிவா, கொள்கைப்பரப்பு செயலாளா் இளங்கோ குரலி இசை வழங்கினா். டாக்டா் முத்துக்குமாா், நிா்வாக அலுவலா் தங்கவேலு , நூலக வாசகா் வட்டத் தலைவா் பாபுநேசன், திருக்கு பண்பாட்டுப் பேரவை பொருளாளா் பரஞ்ஜோதி.முத்து கருப்பன், அக்செப்ட் ஊழல் தடுப்பு சங்கத் தலைவா் ஜெகசன்முகம் , முன்னாள் நூலக வாசகா் வட்டத் தலைவா் வீரசேனன், தலைமை ஆசிரியா் முரளிதரன், பெஸ்ட் பள்ளி முதல்வா் ராமலிங்கம், வழக்குரைஞா் இராம. சிவசங்கா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்.
உதவி பேராசிரியா் பவதாரணி சிறப்புரையாற்றினாா். விழாவில் சீா்காழி தாலுகாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு திருக்கு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, நந்த. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...