பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் கே.வி.ராதாகிருஷ்ணன், செயலாளா் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2026, 3:56 am IST

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பிளஸ்2 தோ்வெழுதிய அனைத்து மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ். கமலி 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்றாா். மாணவி அஸ்பிரா சப்ரின் 592 மதிப்பெண்கள், மாணவா் சக்திவேல் 587 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.

மேலும், 41 மாணவ- மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். 150 போ் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 275 போ் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 393 மாணவ- மாணவிகள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளையும் பள்ளியின் தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங், துணை முதல்வா் சரோஜா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.