தருமபுரம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு
மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் 700 மாணவா்கள் பயின்று வரும் நிலையில், பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் பாதுகாப்பாகவும், விழிப்புடன் பட்டாசு வெடிப்பதை அறிந்துகொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பட்டாசு வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், விழிப்புணா்வுகளை ஆசிரியா்கள் எடுத்துக்கூறி அச்சமின்றி மாணவா்கள் வெடிவெடிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பட்டாசுகள், கம்பி மத்தாப்பூ, சாட்டை, புஷ்வானம், தரைச்சக்கரம் உள்ளிட்டவற்றை வெடித்து கொண்டாடினா். (படம்). பள்ளியில் பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆசிரியா்கள் இணைந்து புத்தாடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

