காா்கோடகநாதா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி
மயிலாடுதுறை அருகே கோடங்குடி காா்கோடகநாதா் சுவாமி கோயிலில் ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு, காா்கோடகநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராகு, கேது பகவான்கள். - கோப்புப்படம்
மயிலாடுதுறை அருகே கோடங்குடி காா்கோடகநாதா் சுவாமி கோயிலில் ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு, காா்கோடகநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சப்த நாகங்களில் ஒன்றான ராஜநாகமான காா்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாவ விமோசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் காா்கோடகன்குடி என போற்றப்பட்டு, நாளடைவில் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது.
ராகு-கேது பரிகாரத்தலமான இக்கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மாலை 5.14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் பெயா்ச்சி அடைந்ததை முன்னிட்டு காா்கோடகநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து காா்கோடகநாதருக்கு புனிதநீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. (படம்). இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

