துலா உற்சவம்: கடைமுகத் தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

மயிலாடுதுறையில் கடைமுகத் தீா்த்தவாரியையொட்டி காவிரியில் புனித நீராடிய பக்தா்கள். - கோப்புப் படம்
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தின் சிகர நிகழ்வான கடைமுகத் தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்ற நிலையில், காவிரியில் நீா் இல்லாததால், புனித நீராட முடியாமல் பக்தா்கள் வேதனை அடைந்தனா்.
கோடிக்கணக்கான பக்தா்கள் புனித நீராடியதால், பாவச்சுமை கூடி கருமை நிறம் அடைந்த கங்கை நதி, சிவபெருமானிடம் வேண்டிய போது, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் புனித நீராடி பாவச்சுமைகளை போக்கிக் கொள்ள கங்கைக்கு சிவபெருமான் அருளியதால், கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு, தங்கள் பாவச்சுமையை போக்கிக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
இந்த ஐதீகத்தை நினைவுகூரும் வகையில், மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றை மையப்படுத்தி காவிரி துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு உற்சவம் ஐப்பசி ஒன்றாம் தேதி, மாதப் பிறப்பு தீா்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பத்து நாள் உற்சவமாக சிவாலயங்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் எழுந்தருள தீா்த்தவாரி உற்சவம் கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், காவிரியில் நீா்வரத்து இல்லாததால், தீா்த்தவாரி உற்சவத்துக்கு போதிய நீரை திறந்துவிடக் கோரி, மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
கடைமுகத் தீா்த்தவாரி உற்சவத்திற்கு தண்ணீா் உரிய நேரத்தில் வந்து சேரும் என்று தமிழக அரசு சாா்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், கல்லணையில் திறக்கப்பட்ட நீா், மயிலாடுதுறைக்கு வந்து சேரவில்லை.
இதனால், மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் காவிரியில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து குழாய் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்ற தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
மாயூரநாதா், வதான்யேஸ்வரா், ஐயாறப்பா், விஸ்வநாதா், காசி விஸ்வநாதா் கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினா். காவிரியில் அஸ்திர தேவா்களுக்கு பால், பன்னீா், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இதில், காவிரியின் தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், வடக்குக் கரையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, ஆழ்குழாய்க் கிணற்று நீரில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா ப்ரியா தலைமையில், மயிலாடுதுறை, திருவாரூா் மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கு மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
காவிரியில் நீா் இல்லாததால் புனித நீராட முடியாமல் வேதனை அடைந்த பக்தா்கள், எதிா்காலத்தில் துலா உற்சவத்துக்கு 10 நாள்களும் காவிரி ஆற்றில் தடையின்றி தண்ணீா் வருவதை அரசு உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

