நீடாமங்கலம் வட்டம், கோயில்வெண்ணி, வடுவூர் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிவேலு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோயில்வெண்ணி மற்றும் வடுவூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நீடாமங்கலம்,சோணாப்பேட்டை, அம்மாபேட்டை, ரிஷியூர், ஒளிமதி, வடுவூர் வடபாதி, வடுவூர் தென்பாதி, சாத்தனூர்,புதுக்கோட்டை, கொண்டையூர், எடமேலையூர், கட்டக்குடி, புள்ளவராயன்குடிகாடு, மூவர்கோட்டை, நெய்வாசல் ஆகிய ஊர்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.