மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

சீர்காழியில் பெ.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்துக்குரிய காவிரி நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து, சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சனிக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :

தமிழகத்துக்குரிய காவிரி நீரை தராத கர்நாடக அரசை கண்டித்து, சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சனிக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அம்மாநிலத்திற்கு நெய்வேலியிலிருந்து மின்சாரத்தை மத்திய அரசு அனுப்ப கூடாது, காவிரி படுகையிலிருந்து பெட்ரோலியம் மற்றும் மீத்தேன் வாயு எடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன் தலைமையில் பேரணியாக அஞ்சல் அலுவலகம் சென்றனர். அங்கு பெரியார் மாணவர் கழக மாவட்ட செயலாளர் அருண்பாபு, நகர செயலாளர் பிரவீண்ராஜ், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ப.வ. பெரியார்செல்வம் பங்கேற்று, கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார். பொறுப்பாளர்கள் பாக்கியராஜ், சிவராஜ், தமிழ் தேசிய பேரியக்கம் நடராஜன், மனித நேய மக்கள் கட்சி ஒ.எம்.ஏ.முசாஹூதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.