ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:09 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வேலையிழந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மணல் இறக்குமதியை ஊக்கப்படுத்தி, மாற்று மணல் உற்பத்தியை உத்தரவாதப்படுத்த வேண்டும். புலம் பெயரும் தொழிலாளர் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. ராமன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் வி.எம். மகேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.  சொக்கலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
கட்டடத் தொழிலாளர் சங்கம் மற்றும் சார்பு சங்கங்களின் நிர்வாகிகள் சோமு. இளங்கோ, சி. மதியழகன், ஆர். கர்ணன், கே. ராஜேந்திரன், கே. செந்தில்குமார், பாரதிமோகன், பி. சண்முகவேல், டி. இளங்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.