நாகூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் விளம்பர பதாகைகளை சேதப்படுத்தியதாக ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகூரில் வசிப்பவர் அலெக்ஸாண்டர் (49). இவர் நாகூரில் உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயத்தின் நிர்வாகியாக உள்ளார். இந்த ஆலயத்தில் மே 13 முதல் 20 வரை ஆண்டுத் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கான வரவேற்பு விளம்பர பதாகை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பதாகை கிழிக்கப்பட்டது குறித்து நாகூர் போலீஸாரிடம், ஆலய நிர்வாகி அலெக்ஸாண்டர் புகார் அளித்தார்.
அலெக்ஸாண்டர் அளித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து நாகூரைச் சேர்ந்த மணி (22) என்பவரை கைது
செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.