வைகாசி மாத பூரநட்சத்திரத்தையொட்டி, திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அகோரமூர்த்தி சுவாமிக்கு பால், திரவியப்பொடி, மஞ்சள்பொடி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அகோர பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.