மயிலாடுதுறை ஜேசிஐ மற்றும் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி சமூக சேவைக் குழு சார்பில், பெண்களும், மாதவிடாய் பிரச்னைகளும் எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை மயிலாடுதுறை ஜேசிஐ தலைவர் பி. சரவணன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில், கல்லூரி முதல்வர் த. அறவாழி முன்னிலை வகித்தார். சமூக சேவைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆர். இளவரசி, மாதவிடாய் பிரச்னை குறித்தும், பெண்கள் சுகாதாரமாக எதிர்கொள்ள வேண்டிய நெறிகளையும், சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்தும் பேசினார். ஜேசிஐ முன்னாள் தலைவர் கோவி. அசோகன், துணைத் தலைவர் சிவக்குமார், துணைச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.