திமுகவுக்கு காடுவெட்டி குரு வன்னியர் சங்கம் ஆதரவு
By DIN | Published On : 01st April 2019 07:45 AM | Last Updated : 01st April 2019 07:45 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளருக்கு காடுவெட்டி குரு வன்னியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செ. ராமலிங்கம் குத்தாலம் ஒன்றியப் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவரை காடுவெட்டி குரு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் வழுவூர் வி.ஜி.கே. மணி ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, குடந்தை சட்டப் பேரவை உறுப்பினர் க. அன்பழகன், நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.