திமுக தலைமையிலான மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி நாகை நகர நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுக நாகை நகரச் செயலாளர் போலீஸ் அ. பன்னீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் என். கெளதமன், கீழ்வேளூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான உ. மதிவாணன் மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள் தீவிர களப்பணியாற்றவேண்டும் என கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை நகரச் செயலாளர் என். கோபிநாதன் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.