மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 01st April 2019 07:46 AM | Last Updated : 01st April 2019 07:46 AM | அ+அ அ- |

பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி பெருந் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சீதளா பரமேஸ்வரி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இவ்விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும், 26-ஆம் தேதி ஏகதினலெட்சார்ச்சனையும், 28-ஆம் தேதி விடையாற்றி உத்ஸவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.