மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1,738 வாக்குச் சாவடிகள்
By DIN | Published On : 17th April 2019 01:49 AM | Last Updated : 17th April 2019 01:49 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்காக 1,738 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி.
இத்தொகுதியில் மொத்தம் 14,66,810 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் - 7,27,720, பெண்கள் - 7,39,040. இதரர் - 50. மக்களவைத் தொகுதியின் வாக்குப் பதிவுக்காக மொத்தம் 1,738 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் 288 வாக்குச் சாவடிகளும், மயிலாடுதுறையில் 266 வாக்குச் சாவடிகளும், பூம்புகாரில் 306 வாக்குச் சாவடிகளும், திருவிடைமருதூரில் 291 வாக்குச் சாவடிகளும், கும்பகோணத்தில் 287 வாக்குச் சாவடிகளும், பாபநாசத்தில் 300 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...