கண் பரிசோதனை முகாமில் 93 பேர் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு
By DIN | Published On : 26th April 2019 05:21 AM | Last Updated : 26th April 2019 05:21 AM | அ+அ அ- |

வேதாரண்யத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 93 பேர் கண் அறுவைச் சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
வேதாரண்யம் ரோட்டரி சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்டப் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் வேதாரண்யம் ஸ்ரீ தாயுமானவர் வித்யாலயம் பள்ளி வளாகத்தில் இம்முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.
சங்கத்தின் சாசனத் தலைவர் கேடிலியப்பன், நிர்வாகிகள் உமாமகேஸ்வரன், மோகன், முன்னாள் தலைவர்கள் சிவகுமார், ரெகுநாதன், கருணாநிதி, சுப்பிரமணியன், சந்திரகாந்தன், என்.எஸ். கருணாநிதி, பொன். தர்மதுரை, ரமேஷ்குமார், நிர்வாகி புயல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில், 400 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, சாதாரண குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், 93 பேர் கண் அறுவைச் சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.