மரத்தில் சடலமாக தொங்கிய இளைஞர்
By DIN | Published On : 26th April 2019 05:22 AM | Last Updated : 26th April 2019 05:22 AM | அ+அ அ- |

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் இளைஞர் ஒருவர் மரத்தில் பிணமாகத் தொங்கியது வியாழக்கிழமை தெரியவந்தது.
வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகத்தின் பின்புறம் உள்ள மரத்தில் இளைஞர் ஒருவர் சடலமாகத் தொங்கியதை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து, வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீஸார் விரைந்து வந்து, இளைஞரின் உடலைக் கைப்பற்றி, சீர்காழி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த இளைஞர் குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் வலங்கைமான் பகுதி குருவாடியைச் சேர்ந்த கா. ஜெய்சங்கர் (30) என்பதும், தனியார் வங்கியில் வசூல் பிரிவில் பணியாற்றிவந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.