சாலைப் பாதுகாப்பு வாகன விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 06th February 2019 06:59 AM | Last Updated : 06th February 2019 06:59 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு இருசக்கர வாகனப் பேரணியை டிஎஸ்பி (பொ) வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். அழகிரிசாமி தலைமை வகித்தார். காவேரி நகரில் தொடங்கிய பேரணி, பூக்கடைத்தெரு, கூரைநாடு, காந்திஜிசாலை, பட்டமங்கலத் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் சென்றவர்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கிச் சென்றனர். இதில், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் ப. டில்லிபாபு, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...