தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 06th February 2019 06:59 AM | Last Updated : 06th February 2019 06:59 AM | அ+அ அ- |

நாகையில் செவ்வாய்க்கிழமை சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, தலைக்கவசம் அணிவது அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
30-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, நடைபெற்ற இப்பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பப்ளிக் ஆபீஸ் ரோடு, காடம்பாடி வழியாகச் சென்று அவுரித்திடலில் நிறைவடைந்தது. பேரணியில், மோட்டார் வாகன ஆய்வாளர் கே.கே. கருப்புசாமி மற்றும் ஆட்டோ, கார், ஓட்டுநர்கள், முகவர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நிர்வாகிகள், பழகுநர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...