சுடச்சுட

  

  வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல்விளக்கம்

  By DIN  |   Published on : 12th February 2019 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில்  மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து செயல் விளக்க முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எளிதாக இருந்தாலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியமுடியாத நிலை இருந்தது. இந்த குறைப்பாட்டை போக்கும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் வருகிற மக்களைத் தேர்தலிலிருந்து இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு (விவிபாட்) இயந்திரத்தையும் இணைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் நாம் வாக்களித்த சின்னம் பதிவான துண்டு சீட்டை 7 விநாடிகள் பார்க்கலாம்.
  இந்த இயந்திரம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திட்டை கிராமத்தில், சீர்காழி வட்டாட்சியர் இரா. சங்கர் ஆலோசனையின்படி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  இந்நிகழ்ச்சிக்கு மண்டல துணை வட்டாட்சியர் பாபு தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதி மக்கள் பங்கேற்று, ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவு செய்தனர். பின்னர், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் சேகரித்த துண்டு சீட்டுகளைக் கொண்டு வாக்குப் பதிவு சரிபார்க்கப்பட்டது. இதேபோல், தில்லைவிடங்கன், செம்மங்குடி, வருஷபத்து, திருக்கருக்காவூர், வடகால், கடவாசல் உள்ளிட்ட கிராமங்களிலும் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.
  திருக்குவளையில்...
  திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலையங்களில் மக்களிடையே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  2019 மக்களவைத்  தேர்தல் முன்னிட்டு திருக்குவளை வட்டத்தில், வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மக்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக  மனக்குடி வையாபுரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர் தாம் அளித்த வாக்கு எந்த வேட்பாளருக்கு என்று உறுதி செய்து கொள்ளவும், வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர், சின்னம் ஆகிய விவரங்கள் அச்சிட்ட தாளை 7 விநாடிக்குள் சரிபார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai