நிவாரணம் கோரி உண்ணாவிரதம்
By DIN | Published On : 04th January 2019 08:38 AM | Last Updated : 04th January 2019 08:38 AM | அ+அ அ- |

வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு ஊராட்சியில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மஞ்சக்கண்ணி, அரியக்கவுண்டர் காடு பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்; கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கி, அரசே வீடு கட்டித்தர வேண்டும்; மா, முந்திரி, தென்னை, சவுக்குப் பயிர்களுக்கு விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
மருதூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் கே.ஏ. சம்மந்தம் தலைமை
வகித்தார்.
தகவலறிந்து வந்த கரியாப்பட்டினம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ரமேஷ், காவல் ஆய்வாளர் வேம்பரசி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொங்கல் பண்டிக்கைக்குள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என உறுதியளித்தனர். இதையடுத்து, உண்ணாவிரதம் பிற்பகலில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் 70 பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.