சீர்காழியை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்தில், படகு அணையும் தளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், புதிதாக அமைத்து தர வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் மூலம் தினந்தோறும் 6 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். தவிர, பல்வேறு பணிகளில் துறைமுக வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். நாகை மாவட்டத்திலேயே 2-ஆவது சிறந்த துறைமுகமாக விளங்கி வரும் பழையாறு துறைமுகத்தில், அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள படகு அணையும் தளத்தில் 5 மாதத்துக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு, உள்வாங்கி பள்ளமாகக் காணப்படுகிறது. இந்த பள்ளத்தின் அடியில் கடல் நீர் தெரிகிறது. எனவே, மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, 200 மீட்டர் தொலைவுக்கு படகு அணையும் தளத்தை முற்றிலும் இடித்து விட்டு, புதிய தளம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.