தனியார் வேலை வாய்ப்பு முகாம்
By DIN | Published On : 03rd July 2019 09:54 AM | Last Updated : 03rd July 2019 09:54 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை டெல்டா ஜேசிஐ மற்றும் ஈக்விடாஸ் நிதி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கத் தலைவர் செந்தில் ஆனந்த் தலைமை வகித்தார். ஜேசிஐ மண்டலம் 23-இன் தலைவர் கைலாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஈக்விடாஸ் நிதி நிறுவன மனிதவள மேம்பாட்டு பிரிவைச் சேர்ந்த குணசேகர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். முகாமில் தனியார் துறைகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. பன்னாட்டு நிறுவனங்களின் மேலாளர்கள் பலர் கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். ஜேசிஐ செயலாளர் திருமலைபாண்டியன் நன்றி கூறினார்.