வாக்காளர்களுக்கு அதிமுக வேட்பாளர் நன்றி தெரிவிப்பு
By DIN | Published On : 09th June 2019 03:42 AM | Last Updated : 09th June 2019 03:42 AM | அ+அ அ- |

நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம். சரவணன் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தார்.
தேர்தல் முடிவுக்குப் பின்னர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம். சரவணன் சனிக்கிழமை நாகை சட்டப் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட நாகை மற்றும் நாகூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன், முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், அதிமுக நாகை நகரச் செயலர் தங்க. கதிரவன், பாஜக நாகை மாவட்டத் தலைவர் நேதாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருமருகலில்...
திருமருகல், ஜூன் 8: நாகை மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிட்ட மா. சரவணன் திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக காலை 8 மணிக்கு கொங்கராயநல்லூர் ஊராட்சியில் தொடங்கி ஏர்வாடி, சேஷமூலை, திருப்புகலூர்,புத்தகரம், அம்பல், அகரக்கொந்தகை மற்றும் கட்டுமாவடி, திருமருகல், பனங்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும்,திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன், திருமருகல் ஒன்றியச் செயலர் ராதாகிருட்டிணன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கலையரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.