அய்யனார் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 14th June 2019 10:55 AM | Last Updated : 14th June 2019 10:55 AM | அ+அ அ- |

வேதாரண்யம், ஜூன் 13: வேதாரண்யத்தை அடுத்த தென்னடார் பெரிய முதலியப்ப அய்யனார் கோயில் குட முழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில், குடமுழுக்கையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.