உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 14th June 2019 10:52 AM | Last Updated : 14th June 2019 10:52 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம், ஜூன் 13 : நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கு. ரத்னகுமார் தலைமை வகித்து, உறுதிமொழி வாசகங்களைப் படித்தார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். உதவி பேராசிரியர் கே. கமலகண்ணன் நன்றி கூறினார்.