வாரியத் தேர்வு: பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை
By DIN | Published On : 14th June 2019 10:56 AM | Last Updated : 14th June 2019 10:56 AM | அ+அ அ- |

ராசிபுரம், ஜூன் 13: சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், கடந்த ஏப்ரல் 2019-ல் நடந்து முடிந்த தொழில்நுட்ப வாரியத் தேர்வில் பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வாரியத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், ராசிபுரம் பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சார்ந்த மாணவி சி.பூமா 700 க்கு 698 மதிப்பெண்களும், எலக்ட்ரிக்கல் துறையைச் சார்ந்த மாணவர் கே.மனோஜ் 700க்கு 696 மதிப்பெண்களும், எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சார்ந்த மாணவர் கே.வி.கவின் 700க்கு 693 மதிப்பெண்களும், மாணவி எஸ்.செளமியா 700க்கு 692 மதிப்பெண்களும், மாணவி வி.அருள்மொழி 700க்கு 686 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவர் பி.இளம்சங்கர் 800க்கு 782 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். கல்லூரியில் 19 மாணவ, மாணவியர் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பி.இளம்சங்கர் என்ற மாணவர் கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய நான்கு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவியரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், கல்லூரியின், முதல்வர் எஸ்.சுமதி ,கல்லூரி ஆசிரியர்கள் பாராட்டினர்.