சிவனடியார்கள் அவமதிப்பு: ரயில் டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 14th June 2019 10:54 AM | Last Updated : 14th June 2019 10:54 AM | அ+அ அ- |

சீர்காழி, ஜூன் 13: சிவனடியார்களை அவமதித்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெ.சுவாமிநாதன் அனுப்பிய புகார் மனு: கடலூர் மாவட்டம் ,வேப்பூரிலிருந்து திருநாவுக்கரசர் திருமடத்தைச் சேர்ந்து 151 சிவனடியார்கள் ராமேசுவரம், காசி, கயா, புத்தகயா , அலகாபாத் , திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு, ஜூன் 7- ஆம் தேதி ரயிலில் விருத்தாசலத்துக்கு
வந்தனர்.
அவர்கள், ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது, பயணச்சீட்டு பரிசோதகர் சந்தன்குமார் சிங் என்பவர் சிவனடியார்களிடம் பயணச்சீட்டுகளை கேட்டுள்ளார். அப்போது, பின்னாள் வரும் குருசாமியிடம் பயணச்சீட்டு உள்ளதாக முன்னாள் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளதாக பயணச்சீட்டு பரிசோதகர், சிவனடியார்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.