நாகை ஸ்ரீ மாங்கொட்டை சுவாமிகள் சித்தர் பீடத்தில் குருபூஜை

நாகையில் உள்ள ஸ்ரீமாங்கொட்டை சுவாமிகள் சித்தர் பீடத்தில் குருபூஜை சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நாகையில் உள்ள ஸ்ரீமாங்கொட்டை சுவாமிகள் சித்தர் பீடத்தில் குருபூஜை சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
மகாகவி பாரதியாரின் ஞான குருவான குள்ளசாமி என்கிற ஸ்ரீமாங்கொட்டை சித்தரின் ஜீவ சமாதி பீடம் நாகை மருந்துக் கொத்தளம் தெருவில் உள்ளது. இந்த சித்தர் பீடம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நாகையைச் சேர்ந்த பக்தர்களின் முயற்சியால் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குருபூஜை, சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.  
இதையொட்டி காலை நேர நிகழ்வாக நித்ய பூஜைகளும் இரவு 8 மணியளவில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
 இது குறித்து, பக்தர் ராஜசரவணன் கூறியது: மகாகவி பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு ஞானகுருவாக இருந்த குள்ளசாமி என்கிற ஸ்ரீ மாங்கொட்டை சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். பாரதி-66 என்ற நூலில்  குள்ளசாமி  குறித்து பாரதியார் பாடியுள்ளார்.
சில  வருடங்களாக பராமரிப்பு இல்லாத நிலையில் காணப்பட்ட சித்தர் பீடத்தில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  தொடக்க நிகழ்வாக குருபூஜை நடைபெற்றுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் பூஜைகள் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com