அபிநந்தன் விடுதலை: பாஜகவினர் கொண்டாட்டம்
By DIN | Published On : 02nd March 2019 07:45 AM | Last Updated : 02nd March 2019 07:45 AM | அ+அ அ- |

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தாயகம் திரும்பியதற்காக மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக வாகா எல்லையில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டார். இதை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், பாஜகவினர் கச்சேரி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் வந்து அங்கு பட்டாசு வெடித்து பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பாஜக நகரத் தலைவர் மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலர் நாஞ்சில் பாலு, மாவட்ட எஸ்.சி., பிரிவுத் தலைவர் ஈழவளவன், மாவட்டச் செயலர் பாரதி கண்ணன், ஒன்றியத் தலைவர் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.