தேர்தலையொட்டி சுவர் விளம்பரங்கள் அழிப்பு
By DIN | Published On : 22nd March 2019 09:28 AM | Last Updated : 22nd March 2019 09:28 AM | அ+அ அ- |

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
17-ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலாகியுள்ளதை தொடர்ந்து, நாகை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சீ. சுரேஷ்குமாரின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் இதுவரை நடைபெறாமல் இருந்த அரசியல் கட்சிகளின் கல்வெட்டுகள் மறைப்பு, அரசியல் கட்சிக் கொடிகள் நீக்கம் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியானது தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருக்குவளை கடைவீதியில் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...