100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 30th March 2019 08:36 AM | Last Updated : 30th March 2019 08:36 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு ஒன்றிய ஆணையர் ப. வாணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) டி. கலியராஜன் வரவேற்றார். இப்பேரணி, புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், கண்ணாரத் தெரு, கச்சேரி சாலை வழியே சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், உதவித் திட்ட அலுவலர் இன்பமூர்த்தி, ஊராட்சி செயலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், ஊராட்சி களப் பணி நிர்வாகிகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு முழக்கமிட்டபடி வந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...