திருமருகல் அருகேயுள்ள திட்டச்சேரி பேரூராட்சி ப.கொந்தகை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, நீர் வீணாகி வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி ப. கொந்தகை பிரதான சாலையில் பூமிக்கு அடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் மூலம் நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம், உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் அப்பகுதி மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.