சாலை விபத்து: 4 பேர் காயம்
By DIN | Published On : 05th May 2019 05:44 AM | Last Updated : 05th May 2019 05:44 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகே இருவேறு சாலை விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் மணிவண்ணன் (23), ராஜப்பா மகன் செல்வக்குமார் (26), கிருஷ்ணன் மகன் முருகேசன் (38). இவர்கள் உள்ளிட்ட நான்கு பேர், கழிவறை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், கழிவறை சுத்தம் செய்யும் பணிக்கு பயன்படுத்தும் வாகனத்தில், திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் காயமடைந்தனர். இதுகுறித்து, திருக்குவளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல், கீழ்வேளூரிலிருந்து கச்சனம் செல்லும் சாலையில் இழுப்பூர்சத்திரம் பகுதியில் லாரி மீது தனியார் மினி பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த புரத்தாங்குடியை சேர்ந்த ரஞ்சனி (22) என்ற பெண் காயமடைந்தார்.