வேளாங்கண்ணி அருகே வேன் மோதி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ப.சங்கர் (45). இவர், வெள்ளிக்கிழமை செருதூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, நாகை- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, திருத்துறைப்பூண்டி பகுதியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் மோதியதில் பலத்த காயமடைந்த சங்கர், நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து, கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் ப. ராஜேஷ் (37) என்பவரை கைதுசெய்தனர்.