வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 05th May 2019 05:44 AM | Last Updated : 05th May 2019 05:44 AM | அ+அ அ- |

வேளாங்கண்ணியில், ஒரு வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
வேளாங்கண்ணி, சக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர், வெள்ளிக்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்றிருந்தார்.இந்நிலையில், சனிக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்த பார்த்தபோது,வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ள சென்று பாத்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகைகள், ரூ .25ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த வேளாங்கண்ணி போலீஸார் திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...